பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல குறுந்தொகை 49

நாதையர் குறிப்பிடும் கீழ்க்காணும் கருத்து மனங்கொளத்தக்க தாகும்:

‘சங்ககாலத்துப் புலவர் பெருமக்களின் கவியாற்றலை அறிந்து கொள்வதற்கு இக் குறுந்தொகையும் ஒரு கருவியாகும். இதன்கண் அகநானூற்றைப் போல முதல் கருப்பொருள்களைப் பற்றிய செய்திகள் விரிவாகக் காணப்படவில்லை; திருக்குறளைப் போல அறவே நீக்கப்படவுமில்லை. இலக்கண அமைதி நன்குடையதாகி விரிவும் சுருக்கமும் இன்றி இயற்கைக் காட்சிகளின் எழில் நலங்களையும், அகனேந்திணை யொழுக்கங்களையும், பண்டைக்கால நாகரிகச் சிறப்பையும், வேறு பல அரிய பொருள்களை யும் விளக்கிக்கொண்டு நிற்பது இக் குறுந்தொகை” (குறுந்தொகைப் பதிப்பு: நூலாராய்ச்சி: பக்கம் 27.)

இனிக் குறுந்தொகையினுட் சென்று கவிநலங் கண்டு தெளிவோம்.

பாரதம் பாடிய பெருந்தேவனர் பாடிய முருகனைப் பற்றிய கடவுள் வாழ்த்துத்துப் பாடல் கொண்ட குறுந்தொகையின் இரண்டாவது பாடல் இறையனர் இயற்றியதாகும். “கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் அப்பாடற் கருத்து, பிற்காலத்தே புராணக் குறிப்பு ஏற்றப்பட்டுத் திருவிளையாடற் புராணத்திலும் இடம் பெற்றுவிட்டது. தன் நெஞ்சமர்ந்த காதலியின் இணையற்ற இயற்கை நலத்தைக் காதலன் புனையும் நோக்கிலே அமைந்துள்ளது இப் பாடல்.

“பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும், உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே! என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூருமல், நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக! நீ அறியும் பூக்களுள், எழுமை யும் என்ைேடு பயிலுதல் பொருந்திய நட்பையும் மயில்போன்ற மென்மையையும் நெருங்கிய பற்களையும் உடைய இவ்

Lo,—~4