பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- o - .

50 மலர் காட்டும் வாழ்க்கை

அரிவையின் கூந்தலைப்போல நறுமணம் உடைய பூக்களும் உள்ளனவோ?’ என்று வினவெழுப்பிக் காதலியின் கூந்தல் இயற்கை மணமுடையது என்று இனிதுறப் புலப்படுத்து கின்றான். பாடல் வருமாறு :

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோரீ யறியும் பூவே

(குறுந்தொகை : 2)

குறுந்தொகை எளிய சொற்களால் விழுமிய உணர்வு களைப் புலப்படுத்தும் உயரிய பாடல்களை உடையதாய்த் துலங்குவதனைப் பின்வரும் பாடல் கொண்டு அறியலாம். தலைமகள் ஒருத்தி, தன் ஆருயிர்க் காதலன் தன்மாட்டுக் கொண்ட தகைசால் காதலை வெளிப்படுத்தும் முறையிலும் சொற்களிலும் ஒர் எளிமைப்பாடும் அருமைப்பாடும் விளங்கக் காணலாம்.

கிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் * கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனெடு நட்பே

(குறுந்தொகை : 3)

தேவகுலத்தார் பாடிய இப் பாடலில் காதலுக்கு நிலமும், வானும், கடலும் முறையே பரப்பிற்கும் உயரத்திற்கும் ஆழத்திற்கும் எல்லைகளாக எடுத்தியம்பப் பெற்றிருப்பது மகிழ்ந்து பாராட்டத் தக்கதாம்.

சங்க காலப் புலவர்களில் கபிலர் தனிச்சிறப்பு வாய்ந் தவர். அளவில் மிகுதியான பாடல்களைப் பாடியவர் என்ற சிறப்போடு தரத்தில் மிகுதியான பாடல்களைப் பாடியவர்