பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல குறுந்தொகை 51

என்ற சிறப்பும் அவருக்குண்டு. அவர் காலத்தே வாழ்ந்த புலவர் பெருமக்களால், பொய்யா நாவிற் கபிலன்’ என்றும், “புலனழுக்கற்ற அந்தணுளன்’ என்றும் பாராட்டப்பெற்றவர். ‘குறிஞ்சி பாடக் கபிலன்’ என்ற சிறப்புப் பெயராற் குறிஞ்சித் திணையைப் பாடுதலில் கபிலர் வல்லவர் என்ற குறிப்பையும் பெறலாம். குறிஞ்சித் தலைவைெருவனிடம் தன் நெஞ்சைப் பறிகொடுத்த குறிஞ்சிக் குமரி யொருத்தி, தன் நெஞ்சிற் கொண்ட நேரிய காதலைத் தக்க உவமைகொண்டு சாற்றுந் திறத்தினை நவையறக் கணலாம். பெரிய பலாமரத்தின் சின்னஞ்சிறிய கிளையில் பெரிய பலாப்பழம் ஒன்று தொங்கிக் கொண்டிப்பதுபோல, தலைவியின் சின்னஞ்சிறு உயிரில் மிகப் பெரிதான காதல் நிறைந்து கிடக்கின்றது என்ற கருத்துப்பட எழுந்துள்ள கபிலர் பாடலைக் காண்க :

வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார டை செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னேரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

(குறுந்தொகை : 1.8)

காதலில் தலைப்பட்ட காதலர் இருவர் வெவ்வேறு ஊரினர்; முன்பின் பார்த்துப் பழகியறியாதவர். ஆனல் அவர்கள் ஊழ்கூட்ட ஒன்றுபட்டார்கள். கண்வழிப் புகுந்தது காதல்; நெஞ்சில் நின்றது; நிறைந்தது. இயற்கைப் புணர்ச்சி’ என்று இதனைப் புலவோர் பொருத்தமுற மொழிவர். இவ்வாறு இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், தலைவன் பிரிவனே எனக் கருதி அஞ்சுகிருள் தலைவி. அக் குறிப்பினை அறிந்த தலைவன் பின்வருமாறு கூறுகின்றான் :

“என் தாயும் உன் தாயும் எத்தகைய உறவு உடையவர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில்