பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மலர் காட்டும் வாழ்க்கை

உறவினர்? இப்பொழுது பிரிவின்றியிருக்கும் நீயும் நானும் முன்பு ஒருவரையொருவர் எவ்வாறு அறிவோம்? ஆல்ை இப்பொழுது செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர், அம் மண்னேடு கலந்து, அதன் தன்மையை அடைதல் போல, அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்று பட்டன.”

யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானு நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.

(குறுந்தொகை : 40)

புலவர் ஒருவர்க்குப் பெயர் தந்த புகழ்மிக்க பாட்டு இது. இப் பாடலைப் பாடிய புலவர் யாரோ அறியோம். ஆல்ை தாம் பாடிய பாடலின் சிறப்பு மிக்க ஒரு பாவடித் தொடரால் செம்புலப் பெயல் நீரார்’ என்று அப் புலவர் அன்றுதொட்டு இன்றுவரை வழங்கப்பட்டு வருகிறார். இனியும் எதிர்காலத் தில் அவர் இப் பெயராலேயே வழங்கப்படுவார் என்பதும் திண்ணம்.

காதல் தந்த ஆற்றல்

ஆணும் பெண்ணும் ஒருவர் மனத்தை ஒருவர் நாடிப் பெற்று ஒன்றுகலக்கும் உணர்விற்குக் காதல்’ என்று பெயர். ஒரு காலத்தே பகைத்துப் போராடியவர்களையும் காலம் கனிவித்துக் காதலில் தள்ளுகிறது. இளவயதில் தலைவன் ஒருவன் தலைவியின் ஐவகையாகப் பிரித்துப் புனையப்பட்டிருந்த கூந்தலைப் பிடித்து இழுத்தான். தலைவியோ பதிலுக்கு அவன் புல்லிய தலைமயிரை வனத்து இழுப்பாளாய் ஒடிஞள். அது