பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்ல குறுந்தொகை 鳄3

போது அவர்தம் செவிலித்தாயர் இடைமறித்துத் தடுக்கவும் ஒழியாமல், பகைமை பாராட்டும் சிறுசிறு சண்டைகளே அன்று போட்டுக்கொண்டார்கள். ஆனல் இப்பொழுதோவெனில், அதாவது உடன்போக்கு ஒருப்பட்டு எழுந்து பாலையில் பயன மாகும் காலையில், இடைச்சுரத்துக் கண்டோர் . இவர்கள் இப்போது மலரைப் பிணைத்த இரட்டை மாலையைப்போல் காணப்படுவதனைக் காண்கிரு.ர்கள். இளமையில் ஏதிலராகத் தமக்குள் கலாம் விளைவித்துக்கொண்ட இவர்களே இவ்வாறு துணைமலர்ப் பிணையலாக வாழ்வில் ஒன்று சேர்த்தது ஊழ்வினையின் ஆற்றலே யாகும் என்று வியந்து போற்று கின்றனர். மோதாசனர் என்னும் சங்கப் புலவர் பாடும் பங்கமில் பாடல் வருமாறு :

இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் புன்றலை யோரி வாங்குகள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிராது ஏதில் சிறுசெரு வுறுப மன்னே நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்ன இவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே

(குறுந்தொகை : 229)

இவ்வாறு ஊழ் கூட்ட ஒன்றுபடும் நெஞ்சினரான தலைவனும் தலைவியும் தன்னலங் குறைந்து ஒருவர்க்காகவே ஒருவர் வாழும் வாழ்க்கையினை மேற்கொள்வர். காதற் செவ் வியால் அவர்கள் மனம் பண்படப் பண்பட அச்சம் அகன்று, அஞ்சாமை மிகுந்து, அவன் வழி துன்பத்தைத் தாங்கும் ஆற்றலும் பெருகக் காணலாம். தலைவி சிறு பெண்ணுக வாழும் பொழுது எடுத்ததற்கொல்லாம் அஞ்சிள்ை. காதல் என்னும் அனுபவம் அவளுக்கு ஏற்படாததற்கு முன்னர் மலேக் கோட்டான் கத்தும் குரலைக் காதிற் கேட்பினும் அவளுடைய உள்ளம் நடுங்கும். வீட்டின் முற்றத்தில் வளர்ந்திருக்கும்