பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மலர் காட்டும் வாழ்க்கை

உள்ளது சிதைப்போர் உளர்.எனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு

(குறுந்தொகை : 283)

மேலும் ஆண் பெண் என்று இருபாலாக அமைந்துள்ள சமுதாயத்தில் ஆணின் உயிர் கடமையாகக் கருதப்பட்டது: பெண்ணின் உயிர் கணவகை நினைக்கப்பட்டது. எனவே இக் காரணத்தால் தலைவி யொருத்தியை விட்டுத் தலைவன் பிரிய ஒருப்பட்டான் என்று தோழி தலைவியிடம் கூறி அவளை ஆற்றுவிக்கின்றாள். பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியுள்ள அப் பாடல் வருமாறு :

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க் காடவர் உயிரென நமக்குரைத் தோருந் தாமே அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.

(குறுந்தொகை : 1.35)

நம்பிக்கை

வெளுத்ததெல்லாம் பாலல்ல; ஆனால் நம்பிக்கையின் அடித்தளத்தில்தான் வாழ்க்கையின் உயிர்நாடி உளது, பிரிந்து செல்லும் தலைவன் கார்காலத் தொடக்கத்தே உறுதி யாகத் திரும்பி வருவதாகக் கூறிச் செல்கிருன். அவன் கூறிச் சென்ற கார் காலம் வந்துவிட்டது. அப்பொழுதுதான் பெய்த புதுப்பெயலுக்குத் தழைத்த முல்லைக்கொடி பற்கள் போன்ற அரும்புகளைக் காட்டித் தலைவியை நோக்கி நகை செய்வதாகத் தலைவி கார்கால வரவைக் கற்பனை செய்து பார்க்கிருள். அவள் தலைவர், அவள்தன் இளமையைப் பாராமல் பொருள் நலமே பொருளாகக் கருதிச் சென்று விட்டவர், கூறியாங்கு திரும்பி வாராமலும், இருக்குமிடத்தை அறிவிக்காமலும் இருப்பதாகவும், அதல்ை கார்காலம் முல்லை யரும்புகளைப்