பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்ல குறுந்தொகை 57

பற்களாகக்கொண்டு"தன்னை நோக்கி நகைப்பதாகவும் கருதிக் கலங்குகின்றாள் தலைவி. ஆழ்ந்து சோர்ந்த அகமனத்தின்

ஆழத்திலிருந்து சோகத்தின் எதிரொலியாகப் பிறக்கிறது பாட்டு:

இளமை பாரார் வளநசைஇச் சென்றாேர் இவனும் வாரார் எவண ரோவெனப் பெயல்புறங் தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை யிலங்கெயி ருக நகுமே தோழி நறுந்தண் காரே. o

(குறுந்தொகை : 126)

மகன்றில் என்பது நீர்வாழ் பறவைகளுள் ஒன்றாகும். இப் பறவைகள் ஆணும் பெண்ணும் பிரிவின்றி எஞ்ஞான்றும் இணைந்து வாழும் தன்மையுடையன. இவை நீர் நிலைகளில் மலர்ந்துள்ள பூக்களின் இடையே பயிலும். அவ்வாறு ஆணும் பெண்ணுமாக இணைந்து செல்லுங்கால் இடையே பூவொன்று இடைப்பட்டாலும், அவ்விடைப்பட்ட காலம் பல ஆண்டுகள் கடந்தாற்போன்ற துன்பத்தை அவற்றிற்கு ஏற்படுத்துமாம். எனவே, பிரிதல் அருமையுடையது காதல். பிரிதல் என்பது உயிர் நீத்தலுக்கு ஒப்பானது. இவ்வாறு கருதுகிருள் தலைவி ஒருத்தி. அவள் உணர்வுகளைப் பாட்டிலே பாங்காக வடித்துள்ளார் சிறைக்குடியாந்தையார் என்ற சீரிய புலவர். அப் பாடல் வருமாறு:

பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து இருவே மாகிய வுலகத் தொருவே மாகிய புன்மைகா முயற்கே.

(குறுந்தொகை : 57