பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல குறுந்தொகை 59

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம் பொன்புனை பகழி செப்பம் கொண்மார் உகிர்நுதி புரட்டும் ஒசை போலச் செங்காற் பல்லி தன்துணை பயிரும் அங்காற் கள்ளியம் காடிறந் தோரே.

(குறுந்தொகை : 1.6)

ஆல்ை இத்தகைய நெஞ்சை வாட்டி வதைக்கும் கடுங் கொடுமையான பாலையிடையிலும் பசுமையான அன்பு தழைப்பதற்கு அறிகுறியான காதற்காட்சிகளும் உண்டு. கொடிய பாலையில் கொள்வதற்கு உணவும் இன்றி வாடி வருந்துகின்றது ஒர் யானைக் குடும்பம். பெண் யானையின் பசி யைப் போக்க ஆண் யானை முயல்கின்றது. தழையுணவோ மூங்கிலோ எங்கும் கிடைக்காமை காரணமாக யானை மரத்தின் மெல்லிய கிளையை ஒடித்து, அதன் பட்டையை உரித்துத் தன் துணை தின்னுமாறு தருகின்றது. அதுபோன்றே அருள் உள்ளம் வாய்ந்த தலைவனும் விரைவில் மீண்டு வந்து தலைவிக்குத் தலையளி செய்வர் எனத் தோழி, தலைவியை ஆற்றுவிக்கின்றாள்.

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர் சென்ற வாறே.

(குறுந்தொகை : 37)

அகப்பொருள் இலக்கியத்தில் தோழிக்குத் தனியிடமும் பெருமையும் பங்கும் உண்டு. ஒன்றித் தோன்றும் தோழி’ என்பர் தொல்காப்பியர்ை. அறிவும் ஆற்றலும் சொற் சதுரப்பாடும் வாழ்க்கை அனுபவமும் நிறைந்தவள் தோழி. தன் குறையைத் தோழி ஏற்றுக் கொள்ளாத காலத்தில், அவளுடைய உதவியை விரும்பி, அவளைத் தலைவன் இரந்து