பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மலர் காட்டும் வாழ்க்கை

பின்னிற்க முயல்கிருன். அப்போது தன் காதல் நெஞ்சத்தைத் திறந்து காட்டும் அவனுடைய உணர்வுகளைப் பின்வரும் பாடலில் அள்ளுர் நன்முல்லையார் என்னும் பெண்பாற் புலவர் அழகுற வடித்துள்ளார்.

காலையும் பகலுங் கையறு மாலையும் ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்று.இப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் மாவென மடலொடு மறுகிற் ருேன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.

(குறுந்தொகை. 32)

இவ் மனவுணர்வினையே மிளைப்பெருங் கந்தன் எனும்

ஆண்பாற்புலவர் தலைவி ஒருத்தியின் கூற்றாகப் பின்வருமாறு கூறுகின்றார்:

சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்து எல்லுறு பொழுதின் முல்லை மலரும் மாலை யென்மஞர் மயங்கி யோரே குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலை பகலும் மாலை துணையி லோர்க்கே.

(குறுந்தொகை. 234)

தலைவனைப் பிரிந்த தலைவிக்கு முல்லை மலரும் காலமாம்

மாலையும் மாலை; கோழி குரலெழுப்பும் காலையும் மாலை யாகும்.

இவ்வாறு ஆணின் உணர்ச்சியினைப் பெண்பாற் புலவரும், பெண்ணின் உணர்ச்சியினை ஆண்பாற் புலவரும் அழகுறப்