பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல குறுந்தொகை ëí

புனைந்துள்ளனர். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை அவர் கட்குக் கைவந்த கலையாகும்.

திசைமாறிய அன்பு

இவ்வாறு காதலின் பேராற்றலைப் புனைந்து கூறும் குறுந் தொகைப் புலவர்கள் ஒரோவழி, திசைமாறிய அன்பின் போக்கினையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

திருமணம் முடிந்து தலைவியுடன் இனிமையுற இல்லறம் நடாத்திய தலைவன் தவற்முெழுக்கத்தில் தலைப்பட்டான். ஒரு சிறிது காலஞ்சென்ற பின்னர்த் தன் தவற்றினை எண்ணித் தனக்குள் தானே நாணித் தலைகவிழ்ந்தான். பெறுதற்கரிய தலைவியைப் பெற்றும், வைத்துப் படைக்காமற் போளுேமே என்ற ஆற்றாமை அவன் உள்ளத்தில் மீதுார்ந்தது. தலைவியின் தோழியை அண்டினன். அவள் வாயிலாகத் துணையாகத் தலைவியை மீண்டும் பெற முனைந்தான்: முயன்றான். அதுபோது அவனே இடித்துத் திருத்த முயலும் தோழியின் கூற்றில் ஒர் அரிய வாழ்வியல் உண்மை புலப்படுகின்றது. தோழியின் கூற்று வருமாறு:

“ஜய வேம்பினது பசிய காயை முன்பு தந்தால் இனிய பொலிவுபெற்ற வெல்லக்கட்டி என்று பாராட்டிக் கூறினீர். இப்பொழுது, பாரி வள்ளலுக்கு உரித்தான பறம்புமலையிடத் துள்ள, தை மாதத்திற் குளிர்ந்தனவாகிய குளிர்ச்சியையுடைய சுனையிலுள்ள தெளிந்த நீரைத் தந்தாலும் வெப்பத்தையுடை யனவாகி உவர்ப்புச்சுவையைத் தருமென்று கூறினீர். நுமது அன்பு அவ்வாறு திசை மாறி விட்டது.”

வேம்பின் பைங்காய்என் தோழி தரினே தேம்பூங் கட்டி யென்றனிர் இனியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணிர்