பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மலர் காட்டும் வாழ்க்கை

தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய வுவர்க்கு மென்றனிர் ஐய வற்றால் அன்பின் பாலே.

(குறுந்தொகை. 196)

- இவ்வாறு தலைவனின் அன்பு மாறிய வகை காட்டி அவனை இடித்துரைத்தாள் தோழி. இதனைக் கேட்ட தலைவன், தன் சீர்கெட்ட வாழ்க்கையைத் திருத்திக் கொண்டிருப்பான் என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ!

தலைவியின் மாருக் காதல்

தலைவன் காதல் தகாத வழியிற் சென்றதாகக் குறிப்பிடப் பட்டாலும், தலைவியின் காதல் ஒருநாளும் மாற்றம் பெற்ற தாகக் குறுந்தொகையில் யாண்டும் பேசப் பெறவில்லை.

தாய் தன் குழந்தை தவறு செய்தபொழுதும், மாறுபட்டு வருத்தியபோதும், வாய்விட்டு அன்னையே என்று அழும் குழந்தையைப் போலத் தலைவி, தலைவன் இன்னுதவற்றைச் செய்தாலும், இனிதாகத் தலையளி செய்தாலும், தலைவனை யன்றித் தன் துன்பத்தை நீக்குவாரைப் பெற்றிலள். ஆதலால் அவனல் என்றும் புரக்கப்படும் எல்லைக்குட் பட்டவள் என்று தோழி கூறும் கூற்றில்தான் எத்துணை கருத்தாழம் நிறைந்து

காணப்படுகின்றது!

தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்டு அன்ன வென்னுங் குழவி போல இன்ன செயினும் இனிதுதலை யளிப்பினும் கின்வரைப் பினள்என் தோழி தன்னுறு விழுமங் களைளுரோ இலளே.

(குறுந்தொகை. 397 : 4-9)