பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。蟲

நல்ல குறுந்தொக்ை 63

உணர்வோவியம்

‘உள்ளத்தால் உணரும் உணர்ச்சிகளைச் சொற்களால் புலப்படுத்துதல் அரிது. ஆயின். கற்பனைத் திறன் மிக்க புலவர்கள் அந்த உணர்ச்சிகளைத் தம் பாட்டில் வடித்து உணர்த்தும்போது, அவற்றை உணர்ந்து போற்றுகிருேம். குறுந்தொகையில் காதலரின் உள்ளத்து உணர்ச்சிகளும் தோழி முதலியவரின் உணர்ச்சிகளும் சொல்லோவியமாக அமையும் திறன் போற்றத்தக்கது’ என்று குறிப்பிடுவார் சான்றாேர் பெருந்தகையாம் டாக்டர் மு. வ. அவர்கள்.

(குறுந்தொகைச் செல்வம்-உணர்வோவியம் பக். 81.)

எடுத்துக்காட்டாகக் கபிலரின் குறிஞ்சித் திணையமைந்த பாடலொன்றைக் காண்போம்.

இருண்ட நள்ளிரவில் பெருமழை பெய்கிறது. தலைவன் தலைவியை நாடி வந்து நிற்கிருன். அவனைக் கண்ட தோழி பின்வருமாறு கூறுகின்றாள் : -

‘மழை நிலமெல்லாம் மறைப்பதால் வானம் தெரிய வில்லை. நீர் நிலமெங்கும் பரந்து ஒடுவதால் நிலம் தெரிய வில்லை. ஒளி மங்கிவிட்டதனால், இருள் சூழ்ந்து விட்டது. பலரும் உறங்கும் நள்ளிரவில் நீ எவ்வாறு வந்தனையோ? வேங்கைமரம் பூத்து மணம் கமழும் எம் சிற்றுாரை எப்படித் தான் தேடிக் கண்டுபிடித்து வந்தாயோ! உன் முயற்சி யருமையை நோக்கும்பொழுது என் மனம் பெரிதாக வருந்து குன்றது.”

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே: நீர்பரங் தொழுகலின் நிலம்காணலையே: எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானுட் கங்குல்