பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மலர் காட்டும் வாழ்க்கை

பழந்தமிழர் தாம் வாழ்ந்த நிலப்பகுதியினை ‘நாவலந் தண்பொழில்’ என வழங்கினர். இவ் வழக்கு, தாம் உறையும் நிலத்தினைப் பொழிலாக-சோலையாகக் கூறும் மரபு, பண்டைத் தமிழர் இயற்கைமாட்டுக் கொண்ட அன்பினை இனிதுறக் கிளத்தும். செடி கொடிகள் மிடைந்து, இலையுந் தழையும், பூவும் கனியும் நிறைந்து காணும் சோலையாகத் தாம் வாழ்ந்த நிலத்தினைக் கருதிய பான்மை உள்ளுதற்குரியது. மேலும், தாம் வாழ்ந்த பகுதியினை நானிலம்’ என்று அழைத் தனர். மலேயும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல் என்றும் கூறப்பட்டன. முல்லையும் குறிஞ்சியும் தத்தம் இயல்பு குன்றி, வளம் குறைந்து, வற்றிய நிலையிற் காணப்படுமேயாயின் அந் நிலப்பகுதி பாலை’ எனப் பட்டது. இவ்வாறு ஐந்நிலம், ஐந்திணை என்னும் வழக்கு ஏற்பட்டது.

நிலங்களின் பெயர்க் காரணம்

தமிழ் மக்கள் வரலாற்றிற்கு எட்டாத காலந் தொடங்கியே நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து, அதன் இயற்கையே பண்பாட்டின் அடிப்படை எனவும் உணர்ந்திருந்த திறமும், ஒவ்வோர் நிலத்திலும் அவ்வச் சூழ்நிலைக்கு ஏற்ற

1. முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்.”

-சிலம்பு. காடுகாண் காதை : 64-66,