பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. o

64 மலர் காட்டும் வாழ்க்கை

யாங்குவந்தனையோ ஓங்கல் வெற்ப

வேங்கை கமழும்எம் சிறுகுடி

யாங்குஅறிந் தனையோ நோகோ யானே.

(குறுந்தொகை-55)

வரலாற்றுக் குறிப்பு

பல அரிய வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது குறுந்தொகை.

நன்னன் என்னும் சிற்றரசைெருவன், ஆற்றங்கரையி லிருந்த தன் தோட்டத்தில் அரிதாக வளர்த்த மாமரத்தின் காயொன்று, அவ்வாற்றிலே வீழ்ந்து அடித்துக்கொண்டு மிதந்து வர, நீராட ஆற்றிற்குச் சென்ற பெண்ணுெருத்தி அதனை எடுத்துத் தின்றாள். அதுகண்ட காவலர் அவளே மன்னன் நன்னனிடம் சென்று நிறுத்த, அவன் அவளுக்குக் கொலைத் தண்டம் விதித்தான். அதனை அறிந்த அவள் தந்தை அவளது நிறையளவிற்கு ஈடாகப் பொன்ற்ை செய்த அவளுருவையும், எண்பத்தொரு களிற்றையும் தண்டமாக இறுப்பதாகக் கூறவும் நன்னன் அதற்கு உடன் படாமற் கொலைபுரிவித்தான்.

மண்ணிய சென்ற வொண்ணுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற் ருென்பது களிற்றாெடு அவள்கிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன்.

(குறுந்தொகை. 292 : 1-5)

இறைச்சிப் பொருள்

சில கருத்துகளை வெளிப்படையாகக் கூருமல், மறைத்துக்

குறிப்பால் உணர்த்துவது இறைச்சி’ எனப்படும். இறைச்சி

தானே பொருட்புறத்ததுவே” என்பது தொல்காப்பியம்,