பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல குறுந்தொகை 65

களவொழுக்கத்தை நீட்டித்து, வரைவு முயற்சி மேற் கொள்ளாது இரவுக்குறி வந்து நிற்கும் தலைவனை எதிர்ப் பட்டுத் தோழி பின்வருமாறு கூறினாள் :

‘ஆண் குரங்கொன்று இறந்ததாக, கைம்மைத் துன்பத் தைப் பொறுக்க மாட்டாத அழகும் இளமையும் வாய்ந்த பெண் குரங்கு, தன் கல்லாத வலிய குட்டிகளைச் சுற்றத்தி னிடத்துக் கையடையாக ஒப்பித்து, உச்சி மலையேறிக் கீழே பாய்ந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நாட்டிற்குத் தலைவனே! நீ நள்ளிரவில் இவண் வாராதே’ என்றாள்.

அவன் நாட்டு மலையில் வாழும் குரங்கே இத்தகு கற்பு வாய்ந்ததாளுல் தலைவியின் கற்பு நிலை கூருமலே தெளிவுறும்.

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல் நாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

(குறுந்தொகை.-69)

முடிவுரை

இவ்வாருகக் குறுந்தொகை ஒர் ஒவியக்கூடமாக ஒளிரக் காணலாம். இவ்வழகு ஒவியங்கள் சிறப்பாகக் காதலர் மனநிலையைக் கவினுற விளக்கி நிற்கின்றன. டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பொருத்தமுறக் கூறுவது போன்று, குறுந்தொகையில் முதல், கரு என்னும் இரண்டும் பொருளாகிய நாடக நிகழ்ச்சிக்கு நிலைக்களகை உதவுகின்றன’ எனலாம். உரிப்பொருள் கவிஞனுடைய இணையற்ற பாவிகத்தைப் பரக்கப் பேசுகின்றது. சுருங்கச் சொன்னல்,

шо. — 5