பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. புறங்ானுாற்றில் நட்பு

“ஒள்ளியோர் பிறந்த இம் மலர்தலை யுலகத்து வாழும் உயிரினங்கள் சில அடிப்படைப் பண்புகளைத் தொன்று தொட்டுத் தொடர்ந்து பெற்று வருகின்றன. ஒன்றனேடு ஒன்று உயிரினங்கள் தொடர்புகொண்டு உறவாடி மகிழ் கின்றன: பயன் பெறுகின்றன. பண்புகளால் ஏறத்தாழ ஒத்த இருவரிடையே, அவ்விருவரும் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்படும்பொழுது அன்பு அரும்புகின்றது. இவ்வன்பு என்னும் அரும்பண்பே மனித வாழ்கையின் அடித்தளமாக அமைகின்றது. இவ்வரிய அன்பு அற்றுப்போகு மேயானல் உயிர் வாழ்வு என்றும் உயரிய இன்ப ஊற்றும் அற்றுப் போகும். எனவே, தமிழ் நாடு செய்த தவப்பயனுய்த் தோன்றிய திருவள்ளுவரும்,

அன்பின் வழியது உயிர்கிலை; அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு

(குறள் : 80)

என்றார். இவ்வன்பின் அடிப்படையாகவே நட்புத் தோற்றம் கொள்ளுகின்றது. இதனையே திருவள்ளுவர்,

அன்பீனும் ஆர்வமுடைமை அதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு

(குறள் : 74)

என்று குறிப்பிட்டுப் போந்தார். இவ்வன்பிற்கு அடைக்குந்

தாழும் இல்லையென மொழிந்தார். மெய்யன்பு கொண் டோரின் கண்ணிரே அவர்தம் அன்பைப் புலப்படுத்தி விடும்