பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மலர் காட்டும் வாழ்க்கை

என்றும் குறிப்பிட்டுள்ளார் (குறள் : 71). திருவள்ளுவர் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் நட்பைப் பற்றி பேசுகிரு.ர்.

இத்தகைய ஆராவன்பு பல திறத்ததாகும். தலைவன் தலைவியரிடையே முகிழ்ப்பது காதல்’ என்றும், பெற்றாேருக்கும் மக்களுக்கும் இடையே ஏற்படுவது பாசம்’ என்றும், நண்பர் களிடையே மலர்வது நட்பு என்றும், ஆண்டவன் மாட்டு அடியார் செலுத்துவது பக்தி” என்றும் பகரப்படும். சமுதாய வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் நட்பு எனும் நயத்தக்க பண்பு பெரிதும் வேண்டப்படுவதாகும்.

தங்கநிகர் சங்கத் தமிழர்களின் பங்கமிலாத் தங்க வாழ்வினை, அங்கை நெல்லிக் கனியெனச் சங்கையின்றி நுவல்வன சங்க இலங்கியங்களாகும். எட்டுத்தொகை என ஏற்றமுடன் இயம்பப்படும் நூல்களில் ஐந்து, அகப்பொருள் பற்றியன; மிகுதி மூன்றில் இரண்டே முற்றிலும் புறப்பொருள் பற்றி மொழிவனவாகும். அவ்விரண்டினுள்ளம் புறநானூறு என்னும் பொற்புடைய நூலே நட்பின் செய்தினையும் திறத்தினையும் நலமுற நவின்று நிற்கும் நூலெனலாம்.

அரிய நட்பிற்கு ஆன்ற இலக்கியமாக இன்றளவும் நின்று நிலவும் கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் வாழ்வினை முதற்கண் நோக்குவோம்.

பிசிராந்தையார் பாண்டிய நாட்டில் பிசிர் என்னும் ஊரினர்; கோப்பெருஞ் சோழனேவெனில் உறந்தையைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டைப் புரந்துவரும் கொற்றவன். இருவரும் ஒருவரை ஒருவர் நேரிற்கானது, ஒருவர் பண்பை ஒருவர் கேள்வியுற்று, நட்புக் கொண்ட வர்கள். அன்னச் சேவலைத் துாதுவிடும் போக்கில் சோழ னுடைய பெரும் பண்புகளைப் பரக்கப் பேசும் பிசிராந்தை