பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றில் நட்பு 69

யார்தம் நட்புத் தோய்ந்த கவிதை நெஞ்சின் திறத்தினைப் புறநானுாறு துவலா நிற்கும். அடுத்துப் பிறிதொரு பாடலில் பசிப்பிணிக்குப் பகைவகைப் பாணர் சுற்றத்தின் புரவலனுக வாழும் அவன் கொடைமடம் கோடாநெஞ்சினை நெஞ்சார எடுத்து மொழியும் பிசிராந்தையார், அவன் நயத்தக்க நட்பின் திறத்தினையும் நயம்படக் கூறும் பாங்கு பாராட்டத்தக்கது. குற்றமற்ற நட்பினகைப் பொத்தியார் என்னும் புலவரொடு நாடோறும் பேசி மகிழ்ந்து வருபவன் என்று கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையாராற் குறிக்கப்படுகின்றான்.

நட்புச் செல்வத்தை நன்கு மதிக்கும் கோப்பெருஞ் சோழன் ஒருஞான்று, தான் பெற்ற மக்களே தன்மேற் போர் செய்ய வந்த காலையில் அவரோடு உடற்ற மறக்களம் நோக்கிக் சென்றான் புல்லாற்றார் எயிற்றியஞ்ர் எனும் புலவர் அறவுரை கூறி அம் மறச்செயலைத் தடுத்து நிறுத்தினர். போரில் வெற்றி பெற்றாலும் உன் காலத்திற்குப் பின் உன் ஆரசு மக்களேயே சாரும் எனவும், ஒருகால் தோல்வியுறின் பிறர் பழிக்கு ஆளாவாய், எனவே போர் ஒழிக. எனவும் புகன்று நின்றார். புலவர் பேச்சுக்கு மாறுபட நடவாத நல்லுளங் கொண்ட கோப்பெருஞ்சோழன் போரைத் தவிர்த் தான் வடக்கிருக்கத் துணிந்தான். அக் காலத்தே ஏதேனும் ஒரு காரணம் பற்றி உயிர்விடத் துணிந்தவர் ஆற்றிடைக் குறைபோன்ற தூயதொரு தனியிடத்தை நண்ணி, உணவு முதலியவற்றைத் துறந்து, கடவுட் சிந்தையுடன் வடக்கு நோக்கியிருந்து உயிர் விடுவர். அம் முறையில் வடக்கிருக்க ஒருப்பட்ட கோப்பெருஞ்சோழன் தன்னைச் சுற்றியிருந்த புலவர்களே விளித்து, பாண்டிய நாட்டுப் பிசிராந்தையார் என் உயிரைத் தம் உயிராக எண்ணிப் பேணும் கலந்த நட்பினர்; யான் செல்வவளத்தில் செழித்த காலையில் அவர் என்னிடம் வாராமற் போனலும், என் உயிர்ப்பறவை இதயக்கூட்டி லிருந்து பறக்கப்போகும் இன்ைைம நிறைந்த இந்த வேளையில் இங்கு வாராது நிற்க மாட்டார்: உறுதியாக வருவார்’ என்று குறிப்பிட்டான்,