பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மலர் காட்டும் வாழ்க்கை

தென்னம் பொருப்பன் கன்னட் டுள்ளும் பிசிரோன் என்பவென் உயிரோம் புருனே, செல்லற் காலை நிற்பினும் அல்லற் காலை கில்லலன் மன்னே

(புறம். 215 : 6-9)

மேலும் அவன், கேள்வி அளவால்தானே அறிந்துள்ளிர் ஒரு போதும் நேரே சந்தித்ததில்லையே; எனவே அவர் இங்கு வருவது எளிதன்று என்று எண்ணுதீர்கள். அவன் என்றும் என்னை இகழாத இனிய பண்பினன்; உள்ளங்கலந்த நண்பன்: புகழ் கெட்டுவரும் பொய்ம்மை வாழ்வை வேண்டாதவன். அவன்தன் பெயரையே, சோழன்’ எனக் கூறிக்கொள்ளும் அளவு என்பால் பேரன்பு செலுத்துபவன். ஆதலின் உறுதியாக இவண் வருவன்; ஒர் இடம் என் பக்கலில் அவனுக்கும் ஒழித்து வைப்பீராக’ என மொழிந்தான்.

கேட்டல் மாத்திரை யல்லது யாவதும் காண்டல் இல்லாது யாண்டுபல கழிய அரிதே தோன்றல் அதற்பட ஒழுகலென்று ஐயங்கொள் ளன்மின் ஆரறி வாளிர் இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன் புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர் பேதைச் சோழன் என்னுஞ் சிறந்த காதற் கிழமையும் உடையன்; அதன்றலை இன்னதோர் காலை கில்லலன் இன்னே வருகுவன்; ஒழிக்க அவற் கிடமே!

(புறநானுாறு : 216)

கோப்பெருஞ் சோழன் சொன்ன சொல் பழுதாகாமல் பிசிராந்தையாரும் அவண் வந்து சேர்ந்தார். இது கண்ட