பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறங்ானுாற்றில் நட்பு 71

பொத்தியார் என்னும் புலவர், பெருஞ் சிறப்புடன் வாழ்ந்த மன்னன் வடக்கிருக்கத் துணிந்தது பெரும் வியப்பைத் தருவ தாகும். அதனினும் வியப்பைத் தருவது புகழே மேன்மையாக வும், நட்பே பற்றுக்கோடாகவும் க ரு தி ன வ ரா. க ப் பிசிராந்தையார் இங்கு வந்ததாகும்’ என்று பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.

நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே எனைப் பெரும் சிறப்பி ைெடு ஈங்கிது துணிதல் அதனினும் மருட்கை யுடைத்தே பிறன்நாட்டுத் தோற்றஞ் சான்ற சான்றாேன் போற்றி இசைமர பாக நட்புக் கந்தாக இணையதோர் காலை ஈங்கு வருதல் வருவன் என்ற கோனது அறிவும் அதுபழு தின்றி வந்தவன் பெருமையும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே

(புறநானூறு : 217 : 1-9)

புணர்ச்சி பழகுதல் வேண்டா! உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்

(குறள் : 275)

எனும் குறளுக்கு இலக்கியமாகத் திகழ்வது இவ்விருவர் நட்பாகும்.

அடுத்து, பொத்தியாரும் கோப்பெருஞ் சோழனுடன் உயிர் துறக்கத் துணிந்தார். கோப்பெருஞ்சோழன் அவரை, மகவு பிறந்த பின் உயிர் துறக்க ஒருப்படுக’ எனக் கூறித் தடுத்துவிட்டான். கோப்பெருஞ் சோழன் இறந்துபட்டதைப் பொறுக்கலாற்றாத புலவர் உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பாடிய பாடலும், சோழனது நடுகல்லைக் கண்டு