பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மலர் காட்டும் வாழ்க்கை

கல்லும் கரையப் பாடிய பாடலும் நம் நெஞ்சுருக்கும் பாடல் களாகும். சோழன் உயிர் கைக்கொண்ட இரக்கமற்ற கூற்றுவனைப் புலவர் சுற்றம் வைவதற்கு என்று திரள வேண்டும் என்று ஆற்றாமை அணை கடக்கப் பாடியவர், மகன் பிறந்த பின் சோழன் நடுகல்லை நண்ணித் தமக்கும் இடந் தருமாறு கேட்டார். நடுகல்லான பிறகும் நல்ல நட்பிற்கு இலக்கியமாக இலங்கும் கோப்பெருஞ் சோழன் இடம் கொடுத் தான.

அடுத்து, ஒளவையார்-அதியமான் நெடுமான் அஞ்சி நட்பின் திறம் போற்றத் தக்கது. நெடுநாள் உயிர் வாழவைக் கும் நெல்லிக்கனியை அரிதின் பெற்ற அதியமான், அதனைத் தன்ைேடு நட்புக்கிழமை பூண்ட ஒளவையாருக்கு வழங்கி அகமகிழ்ந்தான்.

ஒளவையார் பாராட்டுப்படியே நீலமணி மிடற்று ஒருவன் போல இன்றளவும், மாயும் உடல் மறைந்த நிலையிலும், மாயாப் புகழுடன் இலக்கியத்தின்கண் ஒளிவீசி நிற்கிருன். அவன் இறந்தபொழுது ஒளவையார் பாடியுள்ள பாடலே அவன் நட்புச்செல்வத்தை நலமுற நவில்வதாகும். சிறிய அளவில் கள் கிடைத்தால் பிறர்க்கு வழங்கி, பெரிய அளவில் கள் கிடைத்தால் அதனைப் பலரோடு சேர்ந்து உண்பான் என்று குறிப்பிட்டுள்ளார். அவன் இறந்த பிறகு அவன் உடல் ஈமத் தீயில் அடுக்கப்படட நிலையில், ஒளவையார், அத் தீ அவன் உடலை அழிப்பினும், அவன் புகழை மாய்க்க ஒல்லாது” என்று பாடினர். அவன் நடுகல்லைப் பார்த்துப் பெரிதும் மனம் மாழ்கி, காலையும் மாலையும் இனி இல்லையாகுக: என் வாழ்நாளும்,இனி இல்லாது ஒழிவதாகுக’ என்று பாடினர்.

இல்லா கியரோ காலை மாலை அல்லா கியர்யான் வாழும் நாளே

(புறநானுாறு : 232 : 1-2.)