பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறங்ானுாற்றில் நட்பு 73

பூத்தலை யருஅப் புனைகொடி முல்லை, நாத்தழும் பேறப் பாடாவாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரிப் பெருமகனேடு பொய்யா நாவிற் கபிலர் கொண்ட கேண்மையினை நோக்கு வோம். -

முந்நூறு ஊர்களையுடைய பறம்பு நாட்டின் கோமான் பாரி, முந்நூறு ஊர்களையும் பரிசிலர்க்கு வழங்கிவிட்டான். பாரியின் கொடைச் சிறப்பினை எண்ணி ஏக்கற்று அவன்மீது அழுக்காறு கொண்ட முடியுடை மூவேந்தரும், “உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தான பறம்பு மலையை முற்று கையிட்டுப் பாரியைச் சூழ்ச்சியால் வென்று, அவனைக் கொன்றனர். மாரியுடன் பாரியின் கொடையினை ஒப்பிட்டுப் பாடிய கபிலர், பாரி வள்ளலோடு தாமும் தம் உயிரை விடத் துணிந்தார். ஆயினும் அருமைத் தந்தையை இழந்து ஆருத் துயரில் மூழ்கிக்கிடக்கும் பாரிமகளிர் அவர் நினைவில் நின்றனர். எனவே பாரி மகளிரை விச்சிக்கோ எனும் குறுநில மன்னிடம் கொண்டு சென்ற கபிலர் “யானே பரிசிலன்; மன்னும் அந்தணன்’ என்று தம்மை அறிமுகப் படுத்திக்கொண்டார். ஆயினும் அவர் வேண்டுகோள் மறுக்கப்பட்டது. அடுத்து இருங்கோவேள் எனும் வேளிர்குல வேந்தனை நண்ணினர். “புலனழுக்கற்ற அந்தணுளனம் கபிலர், இம் முறை அறி

முகத்தில்ே ஒரு மாற்றம் செய்தார்:

இவர்யார் என்குவை யாயின், இவரே ஊருடன் இரவலர்க் கருளித் தேருடன் முல்லைக் கீந்த செல்லா நல்லிசைப் படுமணி யானைப் பறம்பிற் கோமான் நெடுமாப் பாரி மகளிர் யானே தந்தை தோழன் இவர் என் மகளிர் அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே

(புறநானூறு : 201 : 1-7) என்றார்.