பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மலர் காட்டும் வாழ்க்க்ை

பண்பாடே இயற்கையாய் அமையும் என்று கண்டு, அதன் அடிப்படையிலேயே நிலத்தினை ஐந்திணைகளாகப் பிரித்தனர் என்றும், அவ்வத் திணைகட்கு அவர் இட்ட பெயர்கள் அவரது இயற்கை அன்பினை நன்றாகத் தெளிவுறுத்துகின்றன என்றும், நாகரிகமற்ற மக்கள் அவ்வந் நிலங்களில் தோன்றும் பயிர் அல்லது உணவுப் பொருளின் பெயரை அத் திணைகளுக்குக் கொடுத்திருப்பர் என்றும், அவ்வாறு செய்யாமல் அவ்வந் நிலத்தில் சிறப்பாகக் காணக்கிடக்கும் மலரின் பெயர்களைக் கொண்டே அவ்வந்நிலத்திற்குப் பெயரிட்டுள்ள சிறப்புப் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் அறிஞர் தனிநாயக அடிகளார் குறிப்பிடுவர்.”

ஒவ்வோர் நிலத்திற்கும் பெயர் அமைந்த காரணத்தைத் தொல்காப்பியத்தின் பண்டை உரையாசிரியராம் இளம் பூரணர் பின்வருமாறு கிளத்துவர் :

‘முல்லை குறிஞ்சி என்பன இடுகுறியோ, காரணக் குறியோ எனின், ஏகதேச காரணம்பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறி என்று கொள்ளப்படும். என்னை காரணம் எனின்,

நெல்லொடு நாழி கொண்ட நறுவி முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்

(முல்லைப்பாட்டு, 8-1 0) என்றமையால், காடுறை உலகிற்கு முல்லைப்பூ சிறந்தது ஆகலானும்,

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனெடு நட்பே

(குறுந். 3) என்றவழி, மைவரை உலகிற்குக் குறிஞ்சிப்பூச் சிறந்தது ஆகலானும்,

=

2. தமிழ்த்துாது . பக்கம் 53-54,