பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மலர் காட்டும் வாழ்க்கை

“யானே தந்தை தோழன்’ என்ற தல்ை இவரது நட்பின் பெருமையும், இவர் என் மகளிர் என்ற தல்ை நண்பனின் மக்களைத் தம் மக்கள் என்று எண்ணும் உரிமையும் புலப்படு கின்றன.

இருங்கோவேளும் கபிலர் வேண்டுகோளைச் செவிசாய்த்து ஏற்றுக்கொள்ளாத நிலையில் பாரி மகளிரை அந்தணர்பால் ஒப்படைத்துவிட்டுச் சேரநாடு சென்று, சேர அரசச் செம்மல் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடி நூருயிரங் காணம் பொன்னும் நன்றாவென்னும் குன்றேறி நின்று கண்ணிற்கண்ட நாடெல்லாமும் பெற்று, அப்பொருள் கொண்டு பாரிமகளிர்க் குத் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டுத் தம் ஆருயிர் நண்பனை நினைத்துப் பெண்ணையாற்றை யடைந்து, ஆற்றிடைக் குறையில் வடக்கு நோக்கியிருந்து உண்ணு நோன்பு மேற் கொண்டார். தாம் பாரியோடு கொண்ட இவ்வுலகத் தொடர்பு மறுவுலகிலும் மன்னுதல் பெறவேண்டும் என்று கசிந்து பாடி உயிர் விட்டார்.

இம்மை போலக் காட்டி, உம்மை இடையில் காட்டி கின்ளுேடு உடனுறை வாக்குக உயர்ந்த பாலே

(புறநானூறு : 236 : 10-12)

“அறிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு’ என்ற நிலைக்கு இதுகாறும் காட்டப்பெற்ற புகழ்பூத்த வாழ்வுகள் சான்று களாம்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

(குறள் : 784)

என்றபடி நட்புச் செய்தல் ஒருவரோடொருவர் சிரித்து மகிழும் பொருட்டன்று: நண்பர் நெறி கடந்து செல்லும்