பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறங்ானுாற்றில் நட்பு 75

போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். இம் முறையில் வையாவிக்கோப் பெரும்பேகன், தன் அன்புத் துணைவி கண்ணகியை விட்டுப் பிரிந்து பரத்தமை, யொழுக் கத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றுார் கிழார் முதலியோர் அவனை இடித்துத் திருத்தினர் என்ற செய்தி புறநானூற்றால் தெரிய வருகிறது.

இறுதியாக, ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்னும் மன்னன், சிங்கம் போலச் சீறிவரும் அடங்காத உள்ள முடைய பகைவரை அவர் அழிய வென்று புறங்காண்பேன்; காணேனயின், மாவனும், ஆந்தையும், அந்துவஞ்சாத்தனும், ஆதனழிசியும், இயக்கனும், இன்னும் பிறருமாகிய, என் கண்ணேப் போன்ற நண்பரின் புன்சிரிப்பை இழந்தவளுவேன்’ என்று வஞ்சினம் கூறுமுகத்தான், நட்பிற்கு அவன் காட்டும் முதன்மையும் சிறப்பும் புலகைக் காணலாம்.

மடங்கலின் சினை.இ மடங்கா வுள்ளத்து அடங்காத் தானை வேந்தர் உடங்கியைந்து என்னெடு பொருதும் என்ப; அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறம் காணேன் ஆயின்............ கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த இன்களி மகிழ்ககை இழுக்கியான் ஒன்றே...... வன்புலக் காவலின் மாறியான் பிறக்கே

(புறநானுாறு : 71 : 1-5; 15-16)

என்ற கூற்றில் நட்புச் செல்வத்தை மதித்த நற்றிறத்தினை அறியலாம்.

இதுகாறும் கூறியவற்றால், தமிழர்தம் புறவாழ்வினைப் பரக்கப் பேசும் புறநானூற்றில் நட்பின் சிறப்பும் திறமும் நலமுறக் கிளத்தப்பட்டுள்ளன என்பதும், நல்ல நட்பு. நேரடி