பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பண்டைத் தமிழ்க் கல்வி

சங்க இலக்கியங்கள் பழங்காலச் சமுதாயத்தை மீட்டுரு வாக்கிக் காட்டும் கலைப்பேழையாக விளங்குவதோடு, கல்வி பற்றிய உண்மைகளை உணர்த்தும் கருவூலமாகவும் திகழ் கின்றன.

சிரேக்க நாட்டு மக்களின் கல்வி முறையோடு ஒப்பு நோக் கும் அளவிற்கு நம்முடைய அமைப்பு முறை சீரியதாக இருந்தது.

புலி சேர்ந்து போகிய கல்லளை போல

ஈன்ற வயிருே இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே

(புறம்: 86: 5-7)

ஒளிறுவாள் அருஞ்சம முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

(புறம்: 312: 5-6)

போன்ற புறநானூற்றுப் பாடற்பகுதிகளை நோக்குமிடத்து வீரவுணர்விற்கே பண்டைத் தமிழர்கள் முதலிடம் நல்கினர் என்பது பெறப்படும். கற்க வேண்டிய நூல்களைக் கற்று, ஒழுக்கமும் வீரமும் கொண்ட உயர் பேராளரைச் சான்றாேர் என்றே புலவர்கள் குறித்தனர்.

நோன்புரி தடக்கைச் சான்றாேர்

(பதிற்றுப்பத்து : 2 12)

தேர்தர வந்த சான்றாேர் எல்லாம் தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே

(புறம். 63 : 5-6)