பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மலர் காட்டும் வாழ்க்கை

என்ற இலக்கிய வரிகளை உற்று நோக்கும்பொழுது வீரர்கள் எந்த அளவிற்குப் பெரிதாகப் போற்றப்பட்டனர் என்பது போதரும். மலைபடுகடாம் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனர் வீரர்களை வேல்நிழற் புலவர்கள் என்று குறிக்கின்ற நயம் சிந்தித்தற்குரியது.

புரைத்தோல் வரைப்பின் வேல்நிழற் புலவோர்க்குக் கொடைக்கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவு

(மலைபடுகடாம் : 88-90)

பழந்தமிழர்கள் வீரத்திற்குச் சிறப்பிடம் நல்கினர். ஆனல் கிரேக்க நாட்டு ச்பார்ட்டா வினரைப் போல வாழ்க்கையின் பிற நலன்களையெல்லாம் துறக்கச் செய்து கடுமையான வாழ்வினை மேற்கொள்ளும்படி ஒருபோழ்தும் செய்யவில்லை. இது தமிழர்களுக்குரிய தனிப்பெருஞ் சிறப்பு. மற்றுமொரு தனித்தன்மையும் தமிழகத்திற்கு உண்டு. கிரேக்க நாட்டில் இருந்ததைப்போல அடிமைகளைத் தமிழகத் தில் காண முடியாது. பெண்கல்வி பழந்தமிழகத்தின் தனிப் பெருஞ் சாதனையென்றே குறிக்கலாம்.

உயர்திணை யென்மஞர் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனர் அவரல. பிறவே

(தொல்: சொல்: கிளவி. 1)

என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை வகுக்கும் போழ்து பெரியோர், உயிரோடு வாழும் ஆடவரும் மகளிரும் மக்கள் என்ற உயர்திணைச் சொல்லுக்குரியவர்’ என்று உரையெழுதிச் சென்றனர். பின் பொருளதிகாரத்தில் தொல்காப்பியர்,

செறிவும் நிறையுஞ் செம்மையுஞ் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான

(தொல்: பொருள்: பொருளி. 15)