பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் கல்வி 79

என்று நூற்பா வகுத்தார். இத்தகைய அறிவினை முறையான கல்வி வழியே பெற்றனர். அறிவுத்திறத்தில்ை ஒளவையார், அதியனுக்காகக் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு பெறுதற்கரிய வெற்றியினை வாங்கித்தந்துள்ளார் (சான்று புறம் 95). வெள்ளி வீதியார், காக்கை பாடினியார், நச்செள்ளையார் போன்ற பெண்பாற் புலவர்களின் மதிநுட்பமும் நூலாக்கமும் போற்று தற்குரியன. இப் பெண்பாற் புலவர்களைப் போன்ற மனநிலை யுற்றுத் தலைவி கூற்றாகவும், செவிலி கூற்முகவும் ஆண்பாற் புலவர்கள் பாடிய பாடல்கள் கணக்கிறந்தன. பெண்மை நலமும், பெண் கல்வியும் தமிழகத்தில் பெருமையாகக் கருதப் பட்டன. உலகத்தின் தலைசிறந்த சிந்தனையாளரான சாக்ரடீஸ் கூடப் பெண்ணிற்குச் சமஉரிமையும் கல்வியும் அளிப்பதை வெறுத்திருக்கின்றார். அதற்கு அவருடைய நாட்டு வரலாற்றுச் சூழலும், பண்பாட்டுப் பின்னணியுமே காரணங்களாக இருக் கின்றது.

ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றாேர் பலர்யான் வாழு மூரே

(புறம் : 191 : 6-7)

என்ற வரிகளில் பொதிந்து கிடக்கும் கருத்தாழம் உற்று நோக்கற்குரியது.

கல்வியால் நிறைந்து அதற்கேற்பச் சுவை முதலியவற்றிற் செல்லும் அறிவவிந்து மனமொழி மெய்களான் அடங்கிய சான்றாேர்’ என்று பழைய உரையாசிரியர் தரும் விளக்கம் கருதுதற்குரியது. வெறும் செய்திகளின் தொகுப்புக் கல்வி யாகாது. உண்மைகளை ஆராய்ந்து அழகு, இளமை, செல்வம் ஆகியவற்றைப் பொது நலனுக்காகச் செலவிட்டுக் குறிக் கோள் வாழ்க்கை வாழ்பவர்கள் பலர் இருப்பதால்தான் நரை, திரை, மூப்பு ஆகியன தோன்றற்கு இடமில்லையென்கிறார் புலவர். அறவிலை வணிகராக இயங்கும் தன்மையை