பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மலர் காட்டும் வாழ்க்கை

அறிவுடையோர் பெறுவது இல்லை. அத்தகையோரை ச் சமுதாயம் குறைவாகவே மதித்திருக்கின்றது.

நூல்களை நேராகத் தாமே பயில்வதைவிடப் பிறர்கூறக் கேட்டு தம் நுண்ணறிவினைப் பெருக்கிக் கொள்வதனைத்தான் சிறந்த முறையாகக் கொண்டனர் பழந்தமிழர்.

பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர்

(பட்டினப்பாலை : 169-170)

சில் செவித்தாகிய கேள்வி

(புறம் : 68 : 3)

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

(புறம் : 72 : 1.3)

வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்

(புறம் : 53 : 1.2)

சில சொல்லாற் பல கேள்வியர்

(புறம் : 360 : 2)

போன்ற மேற்கோள்வரிகளை ஆழ்ந்து பயிலும்போது பிறர் கூறக்கேட்டு அறிவினைப் பெருக்கிக் கொள்ளும் முறை பரவலாக இருந்தது என்பது கண்கூடு. கல்வி நிலையங்கள் எவ்வெவ்வூர்களில் இருந்தன என்ற குறிப்புக்கள் இல்லாது போலுைம் மாணவ, ஆசிரியர் நேரடித் தொடர்பு இருந்தது என்பதும், முழுநேர அமைப்பினைப் பெற்றிருந்தது என்பதும் அறியக் கிடக்கின்றது. கற்க வேண்டிய முறை பற்றி நம் நல்லூழின் காரணமாக ஒரு பாடல் கிடைத்துள்ளது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

(புறம் : 188 : 1-2)