பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் கல்வி 81

எனத் தொடங்குகிறது அப் பாடல். இவ் வரிகளிலிருந்து தந்தை-மகன் உறவு ஆசிரிய மாணவரிடையே விளங்கியமை போதரும். ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நடத்தும் அரசர் குடியில் பிறந்தாலும் வழிபாட்டு முறையிலிருந்து மாறு படாமல் கற்க வேண்டும் என்ற குறிப்பினையும் இப் பாடல் நல்குவதால் மேலைநாட்டு அறிஞர்களாகிய தந்தை Quaioli. Gorrass’ (Father Pestalozzi), ol GirstGL@ (Froebel), ஜான் லாக்கே (John Locke) ஆகியோர்தம் கூற்றுகளுக்கு முன்னேடியாக விளங்கினர் பழந்தமிழர் என்ற உண்மை அங்கை நெல்லிக்கனி போல் விளங்கும். பிற்றை நிலை” என்பதன் விரிவுதான் தற்காலத்திய கற்பிக்கும் முறைகளாம் (Educational Methods). Ffr@ ælduu Gougy urrGG&sr$ 3,3% muu உதவும் கருவி கல்விதான் என்பதனையும் இப் பாடல் மூலமே அறிகின்றாேம்.

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே

(புறம் : 183 : 8-10) என்ன அரிய வெளிப்பாடு சமுதாயத்திலுள்ள குறைகளைக் களேயக் கல்விதான் உறுதுணை புரியவேண்டும் என்று கல்விச் சமூகவியல் அறிஞர்களாகிய * எமில் L–ṁ #$lb” ( Emile Durkheim) • SgfrffS?QL1u5lgör (George Peiyne), • ggrrsör Éggs?” (John Dewey) போன்ற தற்கால அறிஞர்கள் வலியுறுத்தி யுள்ளனர். அந்தக் கண்னேட்டத்தில் நோக்கினல் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்தான் தமிழகத்தின் முதல் கல்விச் arelpsailué audiossoff (The first Educational Sociologist).

ஆயின் கல்வி பொதுவுடைமையாக்கப்பட்ட ஒன்று என்று கூறவியலாது. அவரவர் தம் தொழிலுக்குத் தேவையான கல்வியில்னத்தான் பெற்றிருந்தனர் என்று கருதத் தோன்று கின்றது.

கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட

(பொருநராற்றுப்படை : 1.00) ւD,-6