பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மலர் காட்டும் வாழ்க்கை

கல்லா இளைஞர் கவளம் கைப்ப

(முல்லைப்பாட்டு : 36)

கல்லா மாந்தர் (மதுரைக் காஞ்சி : 420)

கல்லாக் காட்சி (புறம் : 170-3)

கல்லா ஒருவற்கும் (புறம் : 189-4)

போன்ற அரிய தொடர்களை நோக்கும்பொழுது கல்லா” என்ற சொல்லிற்குத் தம்முடைய தொழிலுக்குரிய கல்வியினைத் தவிர வேறு ஒன்றனையும் கல்லாத என்ற பொருளையும் உரையாசிரியர்கள் நல்குவதால் தொழிலின் அடிப்படையில் தான் அக் காலக் கல்விமுறை இருந்தது (Education based on Vocation) என்று நினைக்கத் தோன்றுகின்றது. சிற்சில இடங்களில் கல்லா வென்பதனைச் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமாக்கிக் கற்ற எனும் பொருள் படுமாறும் எழுதிச் சென்றமை சிந்தித்தற்குரியது.

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனுங் குறளும் ஊமும் செவிடும் மாவு மருளும் உளப்பட வாழ்நர்க் கெண்பே ரெச்சம் என்றிவை யெல்லாம் பேதைமை யல்ல துதிய மில்லென

முன்னும் அறிந்தோர் கூறினர்

(புறம் : 28 : 1-6)

என்ற பாடற்பகுதி கல்வியறிவு பெற முடியாத மக்களின் பட்டியலைத் தருகின்றது. இத்தகையோரை இன்றைய கல்வி யாளர்கள் மெதுவாகக் கற்போர் (Slow learners) என்ற வகையில் சேர்க்கின்றனர். அக் காலத்தில் வாய்ப்பும் சூழலும் கு ைற வ ா க இருந்தமையால் மேற்குறித்தவர்களைத் தகுதியற்றவர் எனக் கருதினர் போலும்! உலகின் பல்வேறு பகுதிகளில் அக்காலத்திருந்த மூடநம்பிக்கைகளை ஒப்பு நோக்க இத்தகைய கருத்து ஒன்றும் நகைத்தற்குரியதன்று.