பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் கல்வி 83

பண்டைக்கால மக்கள் உயரிய நீதிக்கருத்துகளைப் பெரிதும் வலியுறுத்தியிருக்கின்றனர். மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனர் பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கிப் பெற்ற வெற்றி சாலும்! அறம்பல செய்க: அதுவே உற்ற துணை!’ எனப் பாடுகின்றார்.

நான்குடன் மாண் டதாயினு மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

(புறம் : 55 : 9-10)

என்று பாண்டியன், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறன, மதுரை மருதனிள நாகனர் பாடுவதும் இவ் விடத்து உற்று நோக்கற்குரியது.

செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பே மெனினே தப்புரு பலவே

(புறம் : 189 : 7-8)

என்று நக்கீரர் பாடியதைத் தற்காலக் கல்வியாளர்கள் பார்வையில் ஆராய்ந்தால் பல நுண்ணிய உண்மைகள் புலப்படும். செல்வம் என்பதனைப் பொருட்செல்வம் என்று LDL Glob Glostoiretrfrupdb (not alone material wealth) & Gogo, அன்பு, அருள், விளைவு, ஒப்பரவு ஆகியவற்றையும் செல்வம் என்று பொருள் கொள்வோமானுல், எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கோட்பாடு மிகப் பழங்காலத்தில் விளங்கியது எனக் கருதுவதில் தவறில்லை. தன்னலம் மட்டும் பேணுவதை இப் பெருமகளுர் சாடுவதைப் போலப் பிறர் இவ்வளவு கடுமை யாகச் சாடியதில்லை. இவ்வகையில் மேலை நாட்டறிஞர் வைகவுண்ட் சாமுவேல்” (Viscount Samuel) அவர்களின் முன்னேடியாகத் திகழ்கிறார் நக்கீரர் என்றால் அது உயர்வு நவிற்சி’ யாகாது.

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

அறத்துவழிப் படுஉம்

(புறம் : 31 : 1-12)