பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர் காட்டும் வாழ்க்கை 3

இருஅல் அருந்திய சிறுசிரல் மருதின் தாழ்சினை உறங்கும் தண்துறை ஊர

(அகநா. 286)

என்புழி, தீம்புனல் உலகிற்கு மருது சிறந்தமையானும்,

பாசடை நிவந்த கணைகக்ால் நெய்தல் இனமீன் இருங்கழி ஒதம் மல்குதெறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்

(குறுந் 9) என்றவழிப் பெருமணல் உலகிற்கு நெய்தல் சிறந்தமை யானும், இந் நிலங்களை இவ்வாறு குறிப்பிட்டார் என்று கொள்ளப்படும்.

பாலே என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற்காலம் பற்றி வருதலின் அக்காலத்துத் தளிரும் சினையும் வாடுதலின்றி நிற்பது பாலை என்பதோர் மரம் உண்டாகலின், அச் சிறப்பு நோக்கிப் பாலை என்று குறிப்பிட்டார்’ என்பர்.

மலர்கள் பெற்ற மதிப்பு

பண்டை உலக நாகரிகத்தில் பெயர்பெற்று விளங்கிய கிரேக்கர், உரோமர் முதலான பெருமக்கள் தம் வழிபாட்டு முறையிலும், தம்மை ஒப்பனை செய்துகொள்ளும் வகையிலும் மலர்களைப் பெரிதும் பயன்படுத்தினர் என்பர். வேள்விக்குரிய காளைகளும், விலங்குகளும் மாலை சூட்டப் பெற்ற பின்னரே வேள்வியில் பங்குபற்றின. விருந்தினர் கண்ணி சூடியே விருந்துண்டனர். ஒட்டப்பந்தயத்தில் வென்றவர்கள் இலை தழை மலர்களால் ஆகிய முடியே சூட்டப் பெற்றனர். இது போன்றே பண்டைத் தமிழரும் தம் வாழ்வின் எல்லாத் துறை களிலும் மலருக்குத் தனி மதிப்பளித்து இடம் பெறச் செய்தனர் என்பதனைப் பல்வேறு சான்றுகள் காட்டி நிறுவலாம்.

3. தொல்காப்பியம் : பொருளதிகாரம். நூற்பா : 5.

உரை.