பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| o * -

84 மலர் காட்டும் வாழ்க்க்ை

என்று கோவூர்கிழாரும் கூறியமை சிந்தித்தற்குரியது. எனவே உயரிய அறக்கோட்பாடு எல்லாத்தரத்தவர்களுக்கும் உணர்த்தப்பட்டது என்பது வெளிப்படை.

உண்டாலம்ம விவ்வுலகம்

(புறம் : 182) யான் வாழு நாளும் பண்ணன் வாழிய

(புறம் : 173) போன்ற பாடல்கள் பொது நலத்தின் மேம்பாட்டினைச் சிறப்புறப் பாடுகின்றன.

கல்வியிற் பெரியோர் மக்களாலும் வேந்தர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டனர். எந்த அளவிற்குக் கெழுதகைமை பூண்டவர்களாயினும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் பெருமிதத் திற்கும் குறைவு நேர்ந்தால் தங்கள் கல்விச் செருக்கால் மற்றவர்களைப் பொருட்படுத்தாத மனப்போக்கினைப் பெரிய வர்கள் பெற்றிருந்தனர்.

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

(புறம் : 206 : 1.3) பெரிதே யுலகம் பேணுநர் பலரே

(புறம் : 207 : 7)

என்று ஒளவையாரும் பெருஞ்சித்திரருைம் முறையே அதியமான் நெடுமானஞ்சியையும் இளவெளிமானையும் நோக்கிக் கூறியமை கருதற்குரியது. தொல்காப்பியரும்,

கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் கான்கே

(தொல். பொருள். மெய்ப்: 9)

என்று கூறிப் போந்தார். இத்தகைய பெருமிதத்தைத் தற் காலத்தில் கற்ற பலரிடம் காண இயலவில்லை. அதற்குக் காரணம் வயிறு வளர்ப்பதற்குரிய கல்வியில் மட்டும் நாட்டம் செலுத்துவதுதான். தன்னம்பிக்கைதன வளர்க்காத மேலே நாட்டுக் கல்வி முறையைப் பின்பற்றுவதுதான் காரணம்.