பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் கல்வி é引

முற்காலத்தில் கல்வியிற் பெரிய கழாத்தலையார் என்ற புலவரை ஒரு வேந்தன் இகழ்ந்தான் என்பதற்காகவே அவன் அறம்பாடிச் சபிக்கப்பட்டான். மோசிகீரனர் அரசுகட்டிலில் உறங்கியமையைக் குற்றமாகக் கருதாமல் தகடுரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை சாமரை வீசினன். கோவூர்கிழாரும்,

மண்ணுள் செல்வம் எய்திய நூம்மோ ரன்ன செம்மலும் உடைத்தே

(ւյoւb : 47 : 10-11)

என்று நெடுங்கிள்ளியை நோக்கிப் பாடினர். இத்தகைய அஞ்சாமையை அன்றைய கல்வி நல்கியது. அத்தகு அஞ்சாமை இன்று எங்கே சென்றது? தன்னலம் பேருருவங் கொண்டமை யால் அஞ்சாமை கற்ற பேரறிஞர்களிடம் விடைபெற்றுக் கொள்கிறது. இவ்வஞ்சாமை குன்றியமைக்குக் காரணம் பிறமொழி மோகமும் தாழ்வு மனப்பான்மையும் ஆகும். பழங் காலத்தில் வாழ்நாள் முழுமையும் தமிழையும் அதிலுள்ள இலக்கண இலக்கியங்களையும் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற வேணவா பெரியோரிடம் இருந்தது. எத்தகைய சிறப்புச் செய்தபோழ்தும் தம்மை வியவாமலிருத்தலை மேற்கொண்டிருந் தனர்.

அறியா தேறிய வென்னைத் தெறுவர

இருபாற் படுக்குகின் வாள்வா யொழித்ததை

அதுTஉஞ் சாலுகற் றமிழ்முழு தறிதல்

(புறம் : 50 : 8-10)

என்றார் மோசிகீரனர்.

“அறியா தேறிய வென்னை’ என்ற வரியின் பொருளை யுணரலாமேயன்றி உணர்த்த முடியாது. பெருமை தமிழுக்கே என்றார். அத்தகைய மனநிலையை நம்மனேர் அடைவதெக் காலம்? இன்னும் மகிழ்ச்சிக்கு வாய்ப்பு உண்டா? (Is Happiness still possible) Gr6örd ISITGôlév <905)GHff Gl 1rfLITGöörG ரஸ்ஸல் அவர்கள் தன்னடக்கம் இன்மையும், தருக்கித்