பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மலர் காட்டும் வாழ்க்கை

திரிதலும், பிறரை அவமதித்தலும், பண்பு நலனின்மையும் , கல்வியில் ஆழமின்மையும், சிந்தனைத் தேக்கமுமே மன அமைதி யின்மைக்குக் காரணங்கள் என்கிரு.ர். நம்முடைய கண்களை இத்தகைய புகைப்படலங்கள் மறைக்கும் பொழுது நான் மகிழ்வது எங்ஙனம்?

அண்டர் மகன் குறுவழுதியென்பார் கல்வியினை, வல்லாண் சிருஅன்” என்கிறார் (புறம் : 346). அறிவே வல்லமை (Knowledge is power) என்ற கருத்தில்தான் அப் பெருமகளுர் அப்படிப்பாடியிருக்கின்றர். வாளால் பெறுகின்ற வெற்றியைக் காட்டிலும் அறிவில்ை பெறப்படும் வெற்றியே வாகை என்று பொருள்படும்படி தொல்காப்பியருைம் நூற்பா வகுத்துள்ளார்.

எண்ணற்ற புலவர்கள் பல்வேறு அடைமொழிகள் கொடுக்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுகின்றனர். ஆயின் அடை நெடுங்கல்வியார் என்ற புலவர் கற்ற கல்வியில்ை சிறப்புப் பெற்ற புலவராகத் திகழ்கின்றர். தற்காலத்தில் டாக்டர் பட்டம் பெறுகின்ற பெருமக்களைப் பேரறிஞர்கள் என்று போற்றுகிருேம். இத்தகையோரைத் தமிழில், அடைநெடுங் கல்வியார் என்று சிறப்புப் பட்டம் நல்கிப் பெருமைப்படுத் தலாமே!

கயாதும் ஊரே யாவருங் கேளிர்’ என்ற விழுமிய தத்துவத்தை நல்கியது நம் பழங்காலக் கல்வி. எதிலும் நாட்ட மில்லாமல் இயந்திரமாக மாற்றுகின்றது இக்காலக் கல்வி. சமுதாயத்திற்கும், வாழ்க்கைக்கும் ஏற்ற கல்வியாக இருந்தது பழங்காலத் தமிழ்க்கல்வி. அதிலுள்ள சீரிய கருத்துகளை எடுத்துக்கொண்டு புதியதோர் உலகம் செய்வோம்.