பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருக்குறள்-ஓர் அறிவுக்

களஞ்சியம்

தமிழ்நாடு செய்தவப் பயனய்த் தோன்றியவர் திருவள்ளுவர். அவர் இயற்றியருளிய திருக்குறள் சாதிகளைக் கடந்து, சமயங்களைக் கடந்து, இனங்களைக் கடந்து, நிறங்களைக் கடந்து, இடங்களைக் கடந்து, காலங்களைக் கடந்து வாழும் கவின்மிகு நூலாகத் திகழ்கின்றது. திருவள்ளுவர் தம் கூர்த்த மதியாலும், தெளிந்த வாழ்க்கை அனுபவத்தாலும் நுண்ணிதிற் கண்டு தமிழில் குறள் வெண்பா யாப்பில் வடித்த திருக்குறள் எல்லாக் காலத்திற்கும் இயைந்ததொரு நூலாய்த் திகழ்கின்றது. உலகப் பொதுமை அறங்களை உணர்த்தும் ஒப்பற்ற பெருநூலாய் இன்றளவும் இந் நூல் துலங்குகின்ற காரணத்தால் இந்நூலெழுந்த தமிழ்நாட்டைப் புகழும் நிலையில் சுப்பிரமணிய பாரதியார்,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்று பாராட்டினர். வள்ளுவர் வற்புறுத்தும் அறம் பொருள் இன்பம் முதலாய கருத்துக்கள் மனித சமுதாயம் அனைத்தும் அறிந்து உணர்ந்து தெளிந்து பின்பற்றத்தக்க பேருண்மைகள் என்பது இப் பாராட்டின் வழிப் புலகைக் காணலாம்.

தமிழ் இலக்கியச் சோலையில் பூத்துக் குலுங்கும் வண்ணமலர்கள் மிகப் பல. ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு

நூல் பிடித்தமான நூலாய் இருக்கும். ஒவ்வொருவர் தம்