பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மலர் காட்டும் வாழ்க்கை

வாழ்விற்கும் மனநிலைக்கும் ஏற்ப ஒவ்வொரு நூலினை உயரிய நூலாகக் குறிப்பிடுவர். பிற்கால ஒளவையார் தமிழில் எழுந்த தலைசிறந்த நூல்கள் இவை என்று ஒரு பட்டியல் தருகின்றார். அப் பட்டியலில் ஏழு நூல்களின் பெயர்கள் உள்ளன. அவ்வேழு நூல்களில், திருக்குறள் முதலிடம் பெறு: கின்றது. ஒளவையாரின் அப் பாட்டு வருமாறு:

தேவர் குறளும் திருங்ான் மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.

சைவ சித்தாந்த சாத்திரங்களில் வல்ல உமாபதி சிவா சாரியார் என்பவர் தண்டமிழில் மேலாந்தரமாக எழுந்துள்ள சில நூல்களை ஒரு பாடலில் தொகுத்துக் கூறியுள்ளார். அப் பாடல் வருமாறு :

வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாந் தரம்.

இப் பாடலிலும் திருக்குறள் முதலில் வைத்து எண்ணப் பட்டிருக்கக் காணலாம்.

திருவள்ளுவ மாலையில் பாரதம் பாடிய பெருந்தேவனர் பாடல் ஒன்று காணப்படுகிறது. இப் பாடலில் திருக்குறளுக்கு ஈடாக வடமொழியிலுள்ள பாரதம், இராமாயணம், மனு ஸ்மிருதி, வேதம் என்னும் நான்கையும் உரைப்பர். ஆகவே எல்லாவற்றையும் ஒருசேர வைத்து எண்ணில்ை ஐந்து நூல் களாகும். இவ்வாறு ஐந்து தலையான நூல்களில் ஒன்றாக விளங்குவது திருக்குறள் என்று செப்புகிறது. கீழ்க்கானும் அவர் பாட்டு :