பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்-ஓர் அறிவுக் களஞ்சியம் 89

எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரு-முப்பாற்குப் பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை நேர்வ னமற் றில்லை நிகர்.

அறிஞர் பெருமக்கள் இவ்வாறே தொடர்ந்து காலந்

தோறும் திருக்குறளுக்குப் பாராட்டுரை பகர்வாராயினர்.

அவ்வளவு ஏன்? சாதாரண நாட்டுப்புற மக்களின் நாவில் ծռե-,

ஆலும் வேலும் பல்லுக் குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி என்ற பழமொழி வழங்குகிறது. பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்ற பழமொழியும் திருக்குறளுக்கு ஏற்றந்தரு கின்றது. o

திருக்குறளுக்கு உத்தரவேதம், எழுதுண்ட மறை, தமிழ்

மறை, திருவள்ளுவர், திருவள்ளுவப் பயன், தெய்வ நூல், பழமொழி, பால்முறை, பொதுமறை, பொய்யா மொழி, பொருளுரை, முதுமொழி முதலான பல பெயர்கள் வழங்கு கின்றன.

பொய்யில் புலவன் பொருளுரை தேருய்

என்ற மணிமேகலைத் தொடரால் திருவள்ளுவர் பொய்யுரை யாத புலவராகவும், பொருளுரை’ என்பது திருக்குறளாகவும் குறிக்கப் பெற்றிருப்பது கொண்டு, பெளத்த சமயப் புலவரும் பாராட்டும் அறிவுத்திறம் வாய்ந்தவராகத் திருவள்ளுவர் துலங்கிய திறங்கண்டு தெளியலாம். மேலும், சாமிநாத தேசிகர் என்ற சான்றாேர், திருவள்ளுவர்தம் நூலினைத் திருவள்ளுவர் என்றே குறிப்பதோடு,

பல்காற் பழகினும் தெரியா உளவேல் தொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார் மூன்றினும் முழங்கும்