பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்-ஓர் அறிவுக் களஞ்சியம் 9 |

எழுத்துகள் அகரத்தை முதலாக உடையன; அதுபோன்றே உலகம் இறைவனை முதலாக உடையது. காமத்திற் கின்பம் ஊடுதல்; அவ்வூடுதலுக்குப் பின் கூடி முயங்கினுல் பேரின்பம்

என்று வாழ்க்கைத் தெளிவினை வகைப்படுத்திக் காட் டிர்ை.

‘கடவுள் வாழ்த்து’ என்னும் அதிகாரத்தினை அவர் நூலின்

முகப்பாக வைத்திருப்பதே அவர்தம் அறிவுடைமைக்குச் சான்றாக விளங்குகின்றது.

இரண்டாவது குறள், கற்றல் என்பதே இறைவழி நிற்றலுக்கே என அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிடுகின்றது.

கற்றதல்ை ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.

“கல்வி அதிகாரத்தின் முதற்குறள் கற்கவேண்டியதன் அவசியத்தினையும், கற்றவழி நிற்க வேண்டிய நீர்மையினையும் பேசுகின்றது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

கிற்க அதற்குத் தக.

மேலும் கற்று அறிவு பெறவேண்டியதன் இன்றியமை யாமையினை,

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

கண்ணுடையர் என்பவர் கற்றாேர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.

என்னும் இரு குறள்களில் குறிப்பிடுகின்றார்,