பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மலர் காட்டும் வாழ்க்கை

“எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.’

‘கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படு கின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.” இவ்வாறு கற்றலின் சிறப்பினை விளங்கக் கூறியவர் யார்?

மேலும், கல்வி அறிவுப் பெருக்கத்திற்குத் துணை கோலுவ தனைப் பின் வருமாறு கூறுவர்: H

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.

‘மணலில் உள்ள கிணற்றில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.’ என்று குறிப்பிட்டிருப்பதனை நோக்கினல், அவர்தம் பேரறிவு புலப்படும்.

கற்றவர்தம் சிறப்புகளாகக் கீழ்வருவனவற்றைக் குறிக் கிரு.ர்.

‘கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும் போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?

‘ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப் பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பி லும் உதவும் தன்மை உடையதாகும்.’ *தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் அக் கல்வியையே விரும்புவர்.”