பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்- ஓர் அறிவுக் களஞ்சியம் 93

“ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப்பொருள்கள் அத்தகு தன்மை வாய்ந்த சிறப்புடைய செல்வங்கள் அல்ல.”

யாதானும் நாடாமால் ஊராமால் என்ைெருவன் சாந்துணையுங் கல்லாத வாறு.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.

‘எங்கிருந்தாலும் அறிவைத் தேடு’

என்ற கூற்றிற்கியையத் திருவள்ளுவர் மேற்காணும் குறள் களில் கற்றலால் விளையும் அறிவு குறித்துச் சிறப்பாகப் பேசி யுள்ளார்.

மேலும்,

“அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்! அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க

முடியாத உள்ளரனும் ஆகும்’

என்று கூறியிருப்பது கொண்டு அறிவுடைமையின் ஆன்ற சிறப்பினை அழகுறப் புலப்படுத்தியிருக்கக் காண லாம்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கலாகா அரண்.