பக்கம்:மலர் மணம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f00 மலர்

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்-அது தான் எனது முதல் தேவை.” -

‘நடந்ததை என்னுல் மறக்கவே முடியவில்லையே. நான் வேறு யாரிடமாவது தோற்றிருந்தால் இவ்வளவு கவலைப்பட மாட்டேன். அந்தப் பகையாளி அம்பல வாணனிடம் தோற்றதுதான் என்னவோபோல் இருக் கிறது. இந்த மானக்கேட்ட்ைத் தாங்கிக் கொண்டு நான் எப்படி ஊரில் நடமாடுவேன்.”

‘ உங்களுக்கு ஒரு குறைவும் நேர்ந்துவிட வில்லையே. இருவருக்கும் சமமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. திருவுளச் சீட்டின் மூலம் கிடைத்த வெற்றி ஒரு வெற்றி யாகாது-தோல்வி ஒரு தோல்வியாகாது. என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் இருவருமே வெற்றி பெற்ற வர்கள்-அல்லது இருவருமே தோற்றவர்கள்.”

“ எனக்கு ஆறுதல் செய்ய உன்னத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் அல்லி ? இவ்வளவு அன்பும் அறிவும் ஆற்றலும் உடைய உனது திருமணத்தின்போது என் மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கில்லையே. நான் வெற்றி பெற்றிருந்தால், நாளே மறுநாள் நடக்கவிருக்கும் உன் பரியத்தை இன்னும் எவ்வளவோ சிறப்பாக நடத்து வேனே. நல்ல காரியம் நடக்க இருக்கும்போது சகுனம் சரியாக இல்லையே.”

ஆமாம்பா, சகுனம் சரியாயில்லைதான். இவ்வளவு மனத் துயரத்தோடு எப்படி ஒரு நல்ல காரியத்தை நடத்துவது? எனக்கும் மனம் ஒன்றும் நன்றாக இல்லை. இன்னென்று செய்யலாமே.”

‘ என்னம்மா அது ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/102&oldid=655943" இலிருந்து மீள்விக்கப்பட்டது