பக்கம்:மலர் மணம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மலர்

டிருந்தான். அது உன் கதையேதான். சிறிதும் ஐயமில்லை. இப்போது என்ன சொல்லுகிறாய் ?” -

‘யாரோ பேசிக்கொண்டிருந்த எதையோ கேட்டு விட்டு என்ன மிரட்டுகிறீர்களே! அவர்கள் யாரைப் பற்றிப் பேசிக்கொண் டிருந்தார்களோ.”

‘இன்னுமா ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறாய்? எதிர்கால மாமனர் அல்லவா? நீ எப்படி மாயாண்டியைக் காட்டிக்கொடுப்பாய் ? அவன் உதைத்துமா உனக்குப் புத்தி வரவில்லை ? உள்ளதைச் சொல்லி விடு ‘

“ அப்படி எதுவும் நடக்கவில்லை யப்பா !”

‘ சரி, நீ சொல்ல வேண்டாம். பெற்றவனுக்கு மறைக்கிற பிள்ளையின் தகப்பன யிருப்பதைவிட மறைந்து விடுவது மேல். நான் எங்கேயாவது போய் ஒழிந்து விடுகிறேன். நீ மாயாண்டி மகளேக் கட்டிக் கொண்டு, அவன் காலடியில் விழுந்து கிட !”

“ அப்படிச் சொல்லாதிர்கள் அப்பா! நான் இருக்கும் போது நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். நான் உள்ளதைச் சொல்லி விடுகிறேன்.”

என்று சொல்லி நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் அப்பாவிடம் விவரமாகச் சொன்னேன். நான் ஒத்துக் கொண்டால் அவரது சினம் அடங்கும் என்று எண்ணி னேன்; அதற்குப் பதிலாக அதிகப்பட்டு விட்டது.

சரி, சரி, நான் அவனேப் பார்த்துக் கொள்ளு கிறேன். அவன் வீட்டுப் பரியத்தை நான் நிறுத்தியதுஅவனத் தேர்தலில் தோற்கடித்தது-எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டு அவன் உன்னே ப் பழிவாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/124&oldid=655967" இலிருந்து மீள்விக்கப்பட்டது