பக்கம்:மலர் மணம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மலர்

கடிதத்தைப் படித்து முடித்தேன். சிறிது நேரம் கண்ணும் புரியவில்லை-மண்ணும் தெரியவில்லை. எதிர் பாராத இந்தச் செய்தி எனக்குப் பெரிய ஏமாற்றத்தை யும் எரிச்சலையும் தந்தது. உண்மையாகவே மணந்து கொண்ட மனேவியைப் பறிகொடுத்ததுபோன்ற உணர்வு தோன்றியது. மானக் கேடாகவும் இருந்தது. அதிலும் அல்லியே அயலானே மணந்துகொள்ள மனம் ஒப்பியதை எண்ண எண்ணத் தலை சுழன்றது. இந்த நேரத்தில் இராமாயணக் கதை நினைவிற்கு வந்தது. இராவணல்ை மனைவியை யிழந்த இராமரது நிலையை எண்ணி இரக்கப் பட்டேன். அயலானிடம் இருந்த சீதைமேல் அவர் ஐயம் கொண்டதும் இயற்கைதான் என்று சரிபார்த்துக் கொண்டேன். உலகில் அயலானிடம் மனைவியைப் பறி கொடுத்த ஆடவர் சிலர், எப்படித்தான் உடம்பில் உயிரை வைத்துக் கொண்டு வாழ்கிறார்களோ என்று வியந்தேன். அவர்கள் உடம்பில் உயிர் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கிறதோ-அந்த உயிர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறதோ என்று இறும்பூது எய்தினேன். பல்லே நெரித்துக்கொண்டு, கண்களை இறுக முடிக் கொண்டேன்-ஏன் ? என்னைப் பார்த்துக் கொள்ள எனக்கே வெட்கமாக இருந்தது-எனக்கு யானே இரக்கப்பட்டுக் கொண்டேன். இவ்வளவுக்கும் இன்னும் அல்லி எனக்கு மனைவியாக வில்லே. எங்கள் பெற்றேர் களும் ஒத்துக்கொள்ளவில்லை. எங்கள் இருவர் உள்ளங் களுக்குள் ஏற்பட்ட உறவே என்னே இந்த அளவு ஆட்டிப் படைத்து விட்டது. இந்த உறவைத்தான் காதல்-புனித மான காதல்-தெய்வீகக் காதல் என்று உலகம் உரைக் கின்றதோ ! இத்தகைய காதலுக்கு இடையூறு வரும் பொழுதுதான் சிலர் தற்கொலே புரிந்துகொள்ளுகிறார் களோ அல்லது தங்கள் வாழ்வில் குறுக்கிட்ட எதிரியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/138&oldid=655982" இலிருந்து மீள்விக்கப்பட்டது