பக்கம்:மலர் மணம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 137

கொலே செய்து விடுகிறார்களோ இஃது ஒருவகை உயிரியல் போலும்..........! 3. - -

இல்லையில்லை; எனக்குத் தோன்றிய இத்தனை உணர்வுகளும் வெறும் மனமயக்கமே தனக்கு உரிய தல்லாத ஒரு பொருளே முறையற்ற நெறியில் விரும்பு வதற்குப் பெயர் காதலா?-இல்லை, அது கள்ளத்தனம். அந்தப் பொருளுக்குரியவர்கள் அளிக்க ஒத்துக் கொள்ளாது மறுத்துங் கூட, அதை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதற்குப் பெயர் தெய்வீகக் காதலா?-புனிதமான காதலா? இல்லை, அதற்குப்பெயர் போக்கிரித்தனம்-சண்டித்தனம்-புலன் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு வெல்ல முடியாமல் புறமுதுகு காட்டும் கோழைத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். :

இப்போது என் மன மயக்கம் தெளிவடைந்து விட்டது. நான் மீண்டும் பழைய அழகனுகி விட்டேன். கையிலிருந்த கடிதத்தை மகிழ்ச்சியோடு-மனநிறை வோடு மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். கண்களில் நீர் துளித்தது-அது அழுகைக் கண்ணிர் அன்று- ஆனந்தக் கண்ணிர் என்கிறார்களே-அது தான் அது ! -

அல்லிக்கு என்மேல் இருந்த பித்தம் தெளிந்தது குறித்துப் பெருமகிழ்வு எய்தினேன். அவள் உள்ளத்தில் கவிந்திருந்த பழைய பற்று என்னும் பனி மூட்டம் விலகி யதை எண்ணி நிறைவுற்றேன். அவள் திருப்திக்காக அவளே மணந்துகொள்ள நான் இடையிலே வலிந்து மேற் கொண்ட பெரு முயற்சிக்கும் அதேைலற்பட்டு வந்த பெருந் துன்பங்களுக்கும் ஒரு முடிவு நெருங்கியதே என்றெண்ணி இன்புற்றேன். எங்களால் எ ங் க ள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/139&oldid=655983" இலிருந்து மீள்விக்கப்பட்டது