பக்கம்:மலர் மணம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 139

திருக்கவில்லை என்றால், நான் வேறொருத்தியைத் தானே நாட வேண்டும்? இதேபோலத்தான் அவளுக்கு நானும் !

இந்தக் காலத்தில் நாகரிகம்-சீர்திருத்தம் என்ற மயக்கம் கொண்டவர் சிலர், காதலின் பெருமையறியாத கயவன் என்று என்ன இழித்துரைக்கலாம். எனது கருத்தின, கர்நாடகம்-கண்மூடித்தனம்-பகுத் தறி விற்கு ஒவ்வாதது-பத்தாம்பசலிக் கொள்கை என் றெல்லாம் எள்ளி நகையாடவும் செய்யலாம். நான் சொல்வேன், என் கருத்துத்தான் பகுத்தறிவிற்கு ஏற்றது; இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப-வாய்ப்பு வசதி களுக்கு ஏற்ப வாழ்க்கையை வளப்படுத்தக் கூடியது ; பிறர் சொல்வதுதான் கண்மூடித்தனம்-என்று.

எனவே, அல்லி என்ன மறந்து, தன் தந்தையின் விருப்பப்படி பாண்டியனே மணந்துகொள்ள ஒத்துக் கொண்டது மிகவும் பொருத்தமான-அறிவுடைய செய லாகும். அதுபோலவே, அவளே மறந்து, என் பெற்றேர் விருப்பப்படி வேறொருத்தியை மணந்துகொள்ள வேண் டியதும் எனக்கு அறிவுடைமையாகும். -

ஒருவிதமாக இந்தக் கவலையும் நீங்கி விட்டதால், என் முழுக்கவனத்தையும் படிப்பில் செலுத்தினேன். வெற்றியுடன் பி. ஏ. தேர்வு எழுதி முடித்தேன். முட்டை முடிச்சிகளைக் கட்டிக் கொண்டு சென்னையிலிருந்து எங்கள் ஊர் மலச்சாரலே நோக்கிப் புகை வண்டியில் புறப்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/141&oldid=655986" இலிருந்து மீள்விக்கப்பட்டது