பக்கம்:மலர் மணம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 147

கேள் அண்ணு இந்தவிதமாக முத்தைய முதலியார் வரலாற்றைச் சின்னசாமி செட்டியார் சொல்லக் கேட்டதும், நம் மாமா மாயாண்டி முதலியாருக்கு மயக்கமே வந்துவிட்டதாம். அவரோ கர்நாடகமானவர் -மிகவும் வைதிகம்-பழமை விரும்பி-ஒரு பத்தாம். பசலி-கம் இனத்தாருக்குள்ளேயே உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்று பாகுபாடு பார்க்கக்கூடியவர். அத்தகைய மாயாண்டி முதலியார் ஒரு முதலிக்கும் செட்டிப் பெண்ணுக்கும் பிறந்த பாண்டியனுக்குத் தம் மகள் அல்லியைத் தர உடன்படுவாரா ? தெரிந்த பின்னும் செய்வாரா? உடனே ஊருக்குத் திரும்பி வந்தார். அல்லிக்கு உடல் நலம் இல்லையெனவும், திருமணத்தை .ெ வ று க் கி ரு ள் எனவும், மீறிக் கட்டிக்கொடுத்தால் த ற் .ெ கா லே செய்து கொள் வதாகக் கூறுகிருள் எனவும் ஏதேதோ சாக்குப் போக்குகளே மாப்பிள்ளை வீட்டாருக்குச் சொல்லி யனுப்பித் திருமணத்தையே முறித்துவிட்டார். இனி மேல் மாயாண்டி முதலியார், அந்தப் போலீசு மாப்பிள்ளை பாண்டியன் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டார். எனவே, அல்லிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ‘என்று நடந்த விவரம் முழுவதையும் தான் கேள்விப் பட்டபடி அப்படியே கற்பகம் என்னிடம் ஒப்பித்தாள். அல்லி பாண்டியனே மணந்துகொண்டு பழைய பாட்டி யாகி யிருப்பாள் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, இந்தச் செய்தி பெரும் வியப்பைத் தந்தது. இன்னும் என்னென்ன நடக்க இருக்கின்றனவோ என்று

எண்ணிப் பெருமூச்சு விட்டேன்.

பட்டணத்தில் தங்கிப் படிப்பை முடித்துவிட்டு இப்பொழுதுதான் ஊருக்குத் திரும்பி யிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/149&oldid=655993" இலிருந்து மீள்விக்கப்பட்டது