பக்கம்:மலர் மணம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 159

“ நான்தான் இதற்கு முன்பே உன்னிடம் சொல்லி யிருக்கிறேனே அண்ணு முதல் முதல் அந்தப் போலீசு மாப்பிள்ளை பாண்டியன் என்னைப் பார்க்கவந்தார். நான் அவருக்குக் காஃபி கொடுத்தேன். எங்கள் திருமணமும் முடிவாயிற்று. அவர்தான் என் கணவர் என்று நான் நம்பிவிட்டேன். பிறகு அந்த முடிவு தவறிவிட்டது. நான் ஏமாந்து போனேன். எனவே, கட்டிக்கொண்டால் அவரையே கட்டிக்கொள்வது-இல்லாவிடின் கன்னி யாகவே இருந்துவிடுவது என்று தீர்மானித்துவிட்டேன். இந்த உறுதியை என்னுல் மாற்றவே முடியாது அண்ணு! அப்பர்விடம் சொல்லிவிடு!”

“ நீ சொல்வது புரிகிறது-ஒத்துக்கொள்கிறேன் கற்பகம் ஆல்ை இதில் எத்தனையோ சிக்கல்கள் உள்ளன. முதலாவது, அந்தப் பாண்டியன் உன்னே விரும்பவில்லை-அல்லியின்மேலேயே கண்ணுயிருக்கிறார், இரண்டாவது, நான் அவரைப் போலீசு நிலையத்திலேயே தாக்கிவிட்டு வந்துவிட்டேன்; அதல்ை அவர் என் தங்கையாகிய உன்னை மணந்துகொள்ள உடன்பட மாட்டார். முன்முவது, அப்பாமேலும் அவர் வெறுப்பா யிருக்கிறார். அல்லியின் பரிய த் தை , முன்பு நம் அப்பா கலைத்துவிட்டாரல்லவா ? நான்காவதோ எல்லா வற்றினும் கடுமையானது. அதாவ்து, முன்பு நடந்ததை யெல்லாம் மறந்துவிட்டு அந்தப் பாண்டியனே உன்ன வலிய மணப்பதாக வந்தாலும், நம் அப்பா அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். கலப்புமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறந்தவரல்லவா பாண்டியன் ? சாதிமத உயர்வுதாழ்வுகளில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்ட நம் பெற்றேரும் உற்றார் உறவினரும் இத் திருமணத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/161&oldid=656006" இலிருந்து மீள்விக்கப்பட்டது