பக்கம்:மலர் மணம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மலர்

புற்று என் அறிவைக் குழப்ப இனியும் இடங்கொடுக்க மாட்டேன். மானம் போவதாயின் உயிரே போக வேண்டும் என்பார்கள்-உண்மைதான்-ஒத்துக்கொள் கிறேன். என் மானத்தை யிழப்பதன் மூலம் தங்கையை மணக்கோலத்தில் கண்டு மகிழ்ந்து, பின்பு உயிரையே விட்டு அந்த மானத்தை மீட்பேன். இதுதான் சரி! இல்லாவிடின், தன்னலக்காரன்-தங்கையைப் புறக் கணிப்பவன் என்று தாய்தந்தையர் என்னைத் துாற்று வார்கள் அல்லவா? ஈரப்பசையற்றவன்--இருதயமே இல்லாதவன் என்று கற்பகமும் காய்ந்து என்னைக் கருக்கிக் கொட்டுவாள் அல்லவா ? எனவே, மானத்தை விலையாகக் கொடுத்தாவது கற்பகத்தின் திருமணத்தைக் கண்டுகளிக்க வேண்டும்

என்ற முடிவுக்கு வந்தவனுய், பாண்டியனுடைய கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள உடன் படுவதாகக் காளியப்பனிடம் நான் தெரிவித்தேன். என் முடிவை யறிந்து, அப்பாவும் அம்மாவும் கற்பகமும் மகிழ்ச்சியடைவதைக் கண்டு சுவைப்பதற்காக அவர் களின் முகங்களை மாறிமாறி நோக்கினேன். என் எண்ணத்திற்கு மாருக அவர்களிடம் பெரிய மாறுதலேக் கண்டேன்.

“ எங்கள் மகன் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவன் காலில்விழ ஒருபோதும் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். அப்படிச் செய்வதால் ஆயிரம் காரியம் கூடிவருவதானுலும் சரி-செய்யாமற் போவதால் ஆயிரம் காரியம் கெட்டுப்போவதாலுைம் சரி - ஒருகாலும் நாங்கள் உடன்பட முடியாது. இதல்ை எங்கள் மகள் மணந்துகொள்ளாமல் மடிவதாலுைம் எங்களுக்கு’ உடன்பாடே அவளுக்காக, எங்கள் ஒரே செல்வனே.--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/174&oldid=656020" இலிருந்து மீள்விக்கப்பட்டது